நேற்று, இன்று, நாளை என்பது தான் விடை.
பதிலை சொன்னதும் இவ்வளவு எளிதாக உள்ளது, என நினைக்கத் தோன்றும்.
ஆனால் நாம் சிந்திக்கும் போது பதில் கிடைக்காது. நான் ஒவ்வொரு நாளும் கூறிக் கொண்டிருப்பது கடி ஜோக் அல்ல.
மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் கேள்விகள் தான். மாறுபட்டு சிந்திக்கும் போது 'ஏன் கூடாது' என்ற கேள்வியை நாம் முன் வைக்க வேண்டும். ஏன் கூடாது? என்ற கேள்வி கேட்டவர்கள் பிரபலம் அடைந்திருக்கிறார்கள்.
நீங்களும் செஸ் பயிற்சி செய்யும் போது இந்த நகர்த்தலை ஏன் செய்யக்கூடாது? என்று உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். புதிய வழிகள் கிடைக்கும். இந்தக் கேள்வி மூலம் பயனடைந்தோர் பலருண்டு.
இன்றைய புதிர்:
அறையில் உங்களுடன் நான்கு பேர் உள்ளனர். அறையில் ஓர் மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது. மற்ற நான்கு பேரும் அறையில் உள்ள அனைத்தையும் பார்க்க முடிகிறது. ஆனால் உங்களால் மெழுகுவர்த்தி தவிர அனைத்தையும் பார்க்கமுடிகிறது. ஏன்?
மீண்டும் சந்திப்போம். -- சதாசிவம்
மீண்டும் சந்திப்போம். -- சதாசிவம்

No comments:
Post a Comment