Sunday, April 3, 2011

செஸ் போர்டில் எந்தக் கட்டம் - எந்த கலர்? 03/04/2011


சென்ற பகுதி புதிருக்கான விடை: மணி என்பது மகன் பெயர். ஆடி, ஆவணி என் பதில் கூறியவர்கள் மீண்டும் சென்ற பகுதியை படிக்கவும்.

இந்தப் பகுதியில் செஸ் போர்டில் எந்தக் கட்டம் - எந்த கலர்? என்று கண்டுபிடிக்க எளிய வழியை பழகப் போகிறோம்.

 உதாரணமாக c7, g6, f3 ஆகிய கட்டங்கள் எந்த கலர் என்று உடனே கூற இயலுமா? சற்று யோசிக்க வேண்டியிருக்கிறதல்லவா? கீழ்க்கண்ட வழியை பின்பற்றி உடனே கூற இயலும்.
a முதல் h வரையிலான வரிசைகளை 1 முதல் 8 வரைவரிசைப்படுத்திக்கொள்ளவும்.
அதாவதுa=1,b=2, c=3, d=4 . . . h=8
இதில் 8 ரேங்க் உள்ளன்.
b1, b2, b3, b4, . . . b8
வரிசை எண்ணையும், ரேங்க் எண்ணையும் கூட்டினால் வருவது இரட்டைப் படை எண்ணானால் அந்தக் கட்டம் கருப்பு.
வரிசை எண்ணையும், ரேங்க் எண்ணையும் கூட்டினால் வருவது ஒற்றைப்படை எண்ணானால் அந்தக் கட்டம் வெள்ளை.
முதல் வரிசையில் முதல் கட்டம் கருப்பு கலர், அதாவது a1 = 1+1 = 2 = கருப்பு.
c5 = 3+5= 8 கருப்பு.
g6 = 7 + 6 = 13 வெள்ளை
f3 = 6 + 3 = 9 வெள்ளை.
இன்றைய சிந்தனை: பிஸப் போகும் கட்டங்கள் எந்த எண்ணில் வருகின்றன என்று செஸ் போர்டை வைத்துப் பாருங்கள் ஒரு முக்கிய விஷயம் புலப்படும்.
Print Page

No comments:

Post a Comment

 
Copy Rights @2010 - Erode Chess Academy