 |
சென்ற பகுதியின் புதிருக்கான விடை |
சென்ற பகுதியின் புதிருக்கான விடை: பிக் பென் கடிகாரத்தில் நான்கு புறமும் கடிகாரங்கள் உள்ளன. ஆகவே 8 முட்கள் இருக்கும். மணிக்கூண்டு என்றாலே நான்கு புறமும் கடிகாரங்கள் அமைந்திருக்கும்.
இந்த பகுதியை படிக்கும் யாவரும் 'கமெண்ட்' எழுதுவதில்லை, (திரு. ஐயப்பன், நாமக்கல் தவிர) இப்பகுதியின் கடைசியில் 'கமெண்ட்' என்பதை கிளிக் செய்தால்., ஒரு பெட்டி தோன்றும் அதில் உங்களுடைய எண்ணங்களை, பதில்களை, இந்தப் பகுதியில் ஏற்படும் சந்தேகங்களை, உங்களுடைய வினாக்களை, விமர்சனங்களை, டைப் செய்து, 'போஸ்ட் கமெண்ட்' என்பதை கிளிக் செய்யவும். அப்போதுதான் இப்பகுதி சுவாரஸ்யமாகவும், உபயோகமுள்ளதாகவும் அமையும்.
உங்களது அனைத்து 'கமெண்ட்' களும் கவனத்தில் கொள்ளப்படும்.
நாம் தினந்தோறும் பார்க்கக்கூடியவற்றிலிருந்தே பல மாறுபட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
நாம் அடிக்கடி பார்க்ககூடிய சீலிங் பேன், மற்றும் டேபிள் பேன் இவற்றிக்கிடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. அது என்ன? இது தான் இன்றைய புதிர். நீங்கள் இரண்டையும் பார்த்து/ ஓட விட்டுப் பார்த்து பதில் எழுதினால் போதும்.
குறைந்தது 10 பேராவது எழுதுவீர்கள் என எதிர் பார்க்கும்- சதாசிவம்.
Print Page