நேற்றைய புதிருக்கான விடை:
நீங்கள் மெழுகுவர்த்தியை தலைக்கு மேல் பிடித்திருந்தால், உங்களால் எப்படிப் பார்க்க இயலும்.
மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு உலகம் எப்படி இருந்திருக்கும்?
மெழுகுவர்த்தியும், மண்ணெண்னையும் தான் இருந்திருக்கும். விசிறியும், விறகடுப்பும் தான்.
இது போன்ற சூழ் நிலையில் தான் எடிசன் மின் விளக்கை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மின் விளக்கின் நடுவிலிருக்கும் இழையைத் தயாரிக்க முனைந்தார். நூல், மர இழை,மூங்கில் இழை, கரி ஆகியவற்றை பலவிதமாக பயன்படுத்தினார். 999 முறை தோல்வியடைந்தார்.
1000மாவது முறை தான் பல்ப் எரிந்தது.
விடா முயற்சி என்பதன் பொருள் உங்களுக்குப் புரிகிறதா?
இது போலவே செஸ் சார் அனுப்பும் புதிருக்கு விடை காண எத்தனை முறை முயற்சித்தீர்கள்? நான்கு அல்லது ஐந்து முறை? போதாது, விடா முயற்சியை தொடருங்கள், வெற்றி பெறுங்கள்.
மாறுபட்டு சிந்திக்க மீண்டும் ஓர் வாய்ப்பு.
உங்கள் வீட்டில், தரைத்தளத்தில் மூன்று ஸ்விட்சுகள் உள்ளன. மூன்றும் மாடி அறைக்கானது. மாடி அறையில் உள்ள பல்பிற்கான ஸ்விட்ச் எது என்று கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் இரு முறை தான் ஸ்விட்ச் பயன்படுத்தவேண்டும். அறையினுள் ஒரு முறை தான் நுழைய வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.- சதாசிவம்