Tuesday, March 1, 2011
Cell Phone Message Answer 02/03/2011
செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியா !!! 01/03/2011
'முட்டையை கருங்கல்லின் மீது போடவேண்டும், ஆனால் அது உடையக் கூடாது' எப்படி?இது இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் கேட்கப்பட்ட வினா.
விரைவாக சிந்தித்து விடை கூறியவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை: கருங்கல் கடினமானது, முட்டையைக் கொண்டு உடைக்க முடியாது.
செஸ் விளையாட்டிலும் விரைந்து முடிவெடுக்கக் கூடிய சமயங்கள் பல உண்டு
எ.க : லைட்னிங் கேம், நேரம் குறைவாக உள்ள ஆட்டத்தின் கடைசி நிமிடங்கள். இது போன்று வேறுபட்டு சிந்தித்தவர்கள் சரித்திரம் படைக்கிறார்கள்.
சார் அனுப்பும் எஸ் எம் எஸ் புதிரில் கூட வேறுபட்டு சிந்தித்தால் எளிதாக விடை தெரியும்.
குப்தர்களின் காலம் பொற்காலம் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது.
அவர்கள் கூட வேறுபட்டு சிந்தித்ததால் தான் சதுரங்கம் பிறந்தது.
நீங்கள் ஒரு ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருப்பவரை முந்திச்சென்று விடுகிறீர்கள்.
இப்போது எத்தனாவது இடத்தில் இருப்பீர்கள்? மீண்டும் விரைவில் சந்திப்போம்.-
திரு. சதாசிவம்.
Subscribe to:
Posts (Atom)