Thursday, March 31, 2011

மூளையின் செயல்பாடுகளை ஒட்டி செய்த ஆராய்ச்சி ! ! ! 01/04/2011

இந்த வண்ணங்கள் சொல்லும் செய்தி என்ன? 

  ஏன் இதில் ஒரு வண்ணம் நம்மைக் கவர்கிறது?

  நாம் எவ்வாறு சிந்திக்கிறோமோ அதற்கு ஏற்ற ஒரு வண்ணம் நம்மைக்  கவர்கிறது. 
இது தவிர பல்வேறு கேள்விகள் வாயிலாகவும், மனித வள மேம்பாட்டுத் துறையினர், தங்களுக்கு வேண்டியவாறு ஊழியர்களை தேர்வு செய்கின்றனர். 
 
உதாரணமாக நீங்கள் நீல வண்ணத்தை தேர்வு செய்திருந்தால்:
 நீங்கள் எப்போதும் அறிவார்ந்து, அளவீடு சார்ந்து சிந்திப்பீர்கள்.  நடு நிலையாகவும், தர்க்க முறையிலும் விவாதித்து முடிவெடுப்பீர்கள்.

 நீங்கள் பச்சை வண்ணத்தை தேர்வு செய்திருந்தால்:
எந்தச் செயலையும் ஒழுங்கு முறையாக யோசித்து, வழி முறைப்படுத்துவீர்கள்.திட்டமிடுதல், பத்திரப்படுத்துதல், விதிகளை சரியாக பின்பற்றுதல் ஆகியவற்றில் உங்கள் கவனம் இருக்கும்.

 நீங்கள் மஞ்சள் வண்ணத்தை தேர்வு செய்திருந்தால்:
புதிய கருத்துரு உங்கள் சிந்தனையில் உதிக்கும்.  உடனுக்குடன் செய்து முடிக்கவும் எண்ணுவீர்கள்.  புதிதாக கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்குவீர்கள். உங்கள் யுக்தி தான் உங்கள் பலம்.

 நீங்கள் சிவப்பு வண்ணத்தை தேர்வு செய்திருந்தால்:
உங்கள் சிந்தனையில் மற்றவர்களை நேசிக்கும் பண்புதான் ஓங்கியிருக்கும்.அனைவருக்கும் ஒத்துழைப்பு தரும் நீங்கள் அன்பே உருவானவராக இருப்பீர்கள்.

இது அனைத்தும் ஜோதிடம் அல்ல.   மூளையின் செயல்பாடுகளை ஒட்டி செய்த ஆராய்ச்சியின் முடிவுகளாகும்.

இன்று இது பற்றியே சிந்தித்துக்கோண்டிருபீர்கள் ஆகையால் இன்று எந்தப் புதிரும் இல்லை. - மீண்டும் சந்திப்போம்- சதாசிவம்.

Print Page
 
Copy Rights @2010 - Erode Chess Academy