படத்தில் உள்ளவாறு கோடுகளை நீக்கி விட்டால், ஒரு சிறிய சதுரமும், ஒரு பெரிய சதுரமும் கிடைக்கிறதல்லவா? பெரிய சதுரத்தை நாம் கணக்கில் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? இந்தக் கேள்வியே மாறுபட்ட சிந்தனை.
தமிழில் ஒர் கவிதை படித்தேன்.
இன்றைய தினசரியில்,
' காலமானார் ' பகுதியில்,
தெரிந்த முகங்கள் எதுவும் இல்லை,
சற்று ஏமாற்றமடைந்தேன்.
இன்றைய தினசரியில்,
' காலமானார் ' பகுதியில்,
தெரிந்த முகங்கள் எதுவும் இல்லை,
சற்று ஏமாற்றமடைந்தேன்.
எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. ஆயினும், நம் மனதை ஊடுருவிச்செல்லும் இக் கவிதையில் ஒர் உண்மை உண்டு.
அதன் வெளிப்பாடே சில நாட்களுக்கு முன் பரவிய குறுஞ் செய்தி வதந்தி.
திரு. கலாம் இறந்தார் என்ற பொய்ச் செய்தி ஏன் பரவியது? சிந்திக்கவும். எக்காரணத்தைக் கொண்டும் வதந்திகளை, அதன் குறுஞ்செய்திகளை யாருக்கும் ஃபார்வேர்டு செய்யாதீர்கள்.
நல்ல மனிதர்கள் நீண்ட நாள் வாழட்டும், வதந்திகள் இன்றோடு ஒழியட்டும்.
சரி. இன்றைய புதிருக்கு வருவோம்.
"சில மிருகங்கள் பாலூட்டிகள். பாலூட்டிகளுக்கு வால் இல்லை". இந்தக்கூற்றின் அடிப்படையில், கீழ்க்கண்டவற்றில் எவை சரியானது?
1. சில மிருகங்களுக்கு வால் இல்லை.
2. மிருகங்களான பாலூட்டிகளுக்கு, சில சமயங்களில் வால் இல்லை
.
3. வால் உள்ள மிருகங்கள் பாலூட்டிகள் அல்ல.
3. வால் உள்ள மிருகங்கள் பாலூட்டிகள் அல்ல.
4. பாலூட்டிகளுக்கு வால் இருந்தாலும் மிருகங்கள் தான்.
5. மிருகங்கள் அனைத்துமே பாலுட்டிகள் தான்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். - சதாசிவம்.