இந்த பேருந்துப் புதிரை, பள்ளிக் குழந்தைகளிடத்தில் காண்பித்ததில், 90% குழந்தைகள் சரியான விடை கூறியது.
காரணம் அக்குழந்தைகளிடம் உள்ள மாறுபட்டு சிந்திக்கும் திறன் தான்.
நாம், முன் -பின் சக்கரங்களுக்கிடையேயான வித்தியாசத்தை தேடிக்கொண்டிருக்கையில், குழந்தைகள் படிக்கட்டைத் தேடின. ஆகவே விடையும் கண்டுபிடித்தன.
பேருந்து வலது புறம் செல்கின்றது.
தொலை நோக்கியை (டெலஸ்கோப்) கண்டுபிடித்தது கலிலீயோ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
தொலை நோக்கியை (டெலஸ்கோப்) கண்டுபிடித்தது கலிலீயோ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல. நெதர்லாண்டில், கண் கண்ணாடிக் கடை வைத்திருந்தவரின் மகன்கள் இருவர், கண்ணாடிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான் தொலை நோக்கி.
அதை வானவியல் தொலை நோக்கியாக வடிவமைத்தவர் கலிலீயோ. இளம் வயதினர் மாறுபட்டு சிந்திக்கிறார்கள்.
ஆகவே தான், மேதகு டாக்டர் அப்துல் கலாம் மாணவர்களை இந்தியாவின் வருங்கால தூண்கள் என எண்ணுகிறார்.
மிக எளிதான ஓர் புதிர்:
கீழ்க்கண்ட படத்தில் இரண்டு கோடுகளை மட்டும் நீக்கி, இரண்டு சதுரங்களை உருவாக்க முடியுமா?