Wednesday, March 2, 2011

மாத்தி யோசி 03/03/2011

உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. அதற்காக அவசரப்பட்டு ஏன் ஓட்டப்பந்தயப் புதிருக்கு 'முதலிடம்' என்று பதில் கூறினீர்கள்? மாறுபட்டு யோசிக்கும் போது அவசரம் கூடாது.

 செஸ் விளையாட்டை விளையாட்டாகவே கற்றுக்கொள்ளுங்கள்.  பல குழந்தைகள் செஸ் போட்டியில் தோற்றதற்காக அரங்கத்திலிருந்து அழுதுகொண்டே வெளியேறுவதை கவனித்திருக்கலாம்.

 தான் தோற்றதற்கா குழந்தைகள் அழுகின்றன? இல்லை. 

நீங்கள் எங்காவது ஓட்டப்பந்தயத்தில் தோற்றதற்காக குழந்தைகள் அழுவதை பார்த்ததுண்டா?  பெற்றோருக்கு பயந்து தான் குழந்தைகள் அழுகின்றன. பெற்றோர் எங்கு தவறு செய்கின்றனர் ?

 ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குழந்தை எவ்வாறு தன் சக்தியை வெளிப்படுத்தி ஓடுகிறது என்பது நம் கண் முன்னே தெரிகிறது ஆகையினால் நாம் ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் செஸ் போட்டியில் எந்த அளவிற்கு யோசித்தது என்பது நம் கண் முன்னே தெரிவதில்லை, ஒவ்வொரு நகர்த்தலுக்கும் எத்தனை யோசித்தது என்பது நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. ஆகையினால் நாம் அவர்களை கடிந்து கொள்கிறோம்.

  ஆகவே பெற்றொர்களே பூக்களை கசக்காதீர்கள். அவர்களாகவே மலரட்டும்,  மணம் வீசட்டும்.

 சரி இதற்கு சிந்தித்து பதில் கூறுங்கள்.  மீண்டும் ஓர் ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஓடும் போது, கடைசியாக ஓடும் உங்கள் நண்பனை முந்திச் சென்று விடுகிறீர்கள்.  இப்போது எத்தனாவது இடத்தில் இருப்பீர்கள்?  மீண்டும் சந்திப்போம்.-- சதாசிவம்.
Print Page

Cell Phone Message Answer 03/02/2011


White To Play Win

1.Nc2+ Kb1 2.Bb3 Kc1 3.Ba2 Kd1 4.Nd4 Kc1 [4...Ke1 5.Kd3 Kf2 6.Ne2 Kg2 7.Be6 Kf3 8.Bf5 Kf2 9.Be4 Ke1 10.Ke3 Kd1 11.Bd3 Ke1 12.Bc2 Kf1 13.Nf4 Ke1 14.Ng2+ Kf1 15.Kf3 Kg1 16.Kg3 Kh1 17.Nf4 Kg1 18.Bd3 Kh1 19.Bb5 Kg1 20.Nh3+ Kh1 21.Bc6#] 5.Ne2+ Kd1 6.Kd3 Ke1 7.Ke3 Kd1 8.Bb3+ Ke1 9.Ba4 Kf1 10.Nf4 Ke1 11.Ng2+ Kf1 12.Kf3 Kg1 13.Kg3 Kh1 14.Bb5 Kg1 15.Nf4 Kh1 16.Ba6 Kg1 17.Nh3+ Kh1 18.Bb7# 1–0

 
Print Page

Single Rook Mate

Print Page
 
Copy Rights @2010 - Erode Chess Academy