உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. அதற்காக அவசரப்பட்டு ஏன் ஓட்டப்பந்தயப் புதிருக்கு 'முதலிடம்' என்று பதில் கூறினீர்கள்? மாறுபட்டு யோசிக்கும் போது அவசரம் கூடாது.
செஸ் விளையாட்டை விளையாட்டாகவே கற்றுக்கொள்ளுங்கள். பல குழந்தைகள் செஸ் போட்டியில் தோற்றதற்காக அரங்கத்திலிருந்து அழுதுகொண்டே வெளியேறுவதை கவனித்திருக்கலாம்.
தான் தோற்றதற்கா குழந்தைகள் அழுகின்றன? இல்லை.
நீங்கள் எங்காவது ஓட்டப்பந்தயத்தில் தோற்றதற்காக குழந்தைகள் அழுவதை பார்த்ததுண்டா? பெற்றோருக்கு பயந்து தான் குழந்தைகள் அழுகின்றன. பெற்றோர் எங்கு தவறு செய்கின்றனர் ?
ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குழந்தை எவ்வாறு தன் சக்தியை வெளிப்படுத்தி ஓடுகிறது என்பது நம் கண் முன்னே தெரிகிறது ஆகையினால் நாம் ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் செஸ் போட்டியில் எந்த அளவிற்கு யோசித்தது என்பது நம் கண் முன்னே தெரிவதில்லை, ஒவ்வொரு நகர்த்தலுக்கும் எத்தனை யோசித்தது என்பது நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. ஆகையினால் நாம் அவர்களை கடிந்து கொள்கிறோம்.
ஆகவே பெற்றொர்களே பூக்களை கசக்காதீர்கள். அவர்களாகவே மலரட்டும், மணம் வீசட்டும்.
சரி இதற்கு சிந்தித்து பதில் கூறுங்கள். மீண்டும் ஓர் ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஓடும் போது, கடைசியாக ஓடும் உங்கள் நண்பனை முந்திச் சென்று விடுகிறீர்கள். இப்போது எத்தனாவது இடத்தில் இருப்பீர்கள்? மீண்டும் சந்திப்போம்.-- சதாசிவம்.
No comments:
Post a Comment