நன்று. மிக நன்று. எளிதாகப் பயிற்சி செய்தீர்கள்.
திட்டமிடுதல் என்பது செஸ் விளையாட்டில் ஒரு உத்தி. நாம் சதாரணமாக மூன்று அல்லது நான்கு மூவ் களுக்கு மட்டும் தான் திட்டமிடுகிறோம். அதற்கடுத்த கட்டமாக ஐந்து அல்லது ஆறு மூவ்களுக்கு யோசித்துப்பாருங்கள்.
வீட்டில் , நண்பர்களுடன் விளையாடும் போதே இந்தப் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அப்போது தான் போட்டிகளில் யோசிக்க இயலும்.
நாம் ஒரு சுற்றுலா செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக எவ்வளவு திட்டமிடுகிறோம். எப்போது கிளம்ப வேண்டும், என்னென்ன எடுத்துக்கொள்ள வேண்டும், எங்கு தங்க வேண்டும், எந்தெந்த இடங்கள் சுற்றிப்பார்க்கவேண்டும், எங்கு சாப்பிட வேண்டும் என்பதைக்கூட திட்டமிட்டே செய்கிறோம்.
திட்டமிடாத காரியம் எப்போதும் முழுமையடையாது. நீங்கள் போட்டிக்கு செல்லும் முன்பே நமக்கெதிராக விளையாடப்போகிறவர் எந்த ஒப்பனிங் விளையாடினால், நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெளிவான கருத்து வேண்டும். இல்லையேல் நாம் வாய்ப்பை இழக்க நேரிடும்
. திட்டமிடுவது எவ்வாறு?
எளிதாகச் சொல்ல வேண்டுமானால், நாம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்? ஆங்கிலத்தில் swat அனலிசிஸ் என்று கூறும் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
S.W.A.T. இதன் பொருள்: ஸ்டிரங்த், வீக்னெஸ், ஆப்பர்சுனிடி, த்ரெட் என்பதாகும்.
நம் பலம் என்ன, பலவீனம் என்ன, நமக்குள்ள வாய்ப்புகள் என்ன, நமக்கு அச்சம் தருவது எது, இவைகளை ஒரு தாளில் எழுத வேண்டும்.
பிறகு பலவீனத்தை, பலத்தால் வெல்ல வேண்டும்.
அதாவது, நமக்கு ஒரு சில ஓப்பனிங் தான் தெரிகிறது என்றால், மற்றவர் நமக்குத்தெரியாத ஓப்பனிங் விளையாடினால் கூட நம் ஒப்பனிங்குக்கு பொசிக்ஷன் வரும் வகையில் மாற்றி விளையாடத் தெரிய வேண்டும்
. நமக்கு அச்சம் தருவது எது? பெரிய போட்டியாளர்களை எதிர் கொள்வது.
ஆனால் அது தான் நமக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு என்று தான் நாம் நினைக்கவேண்டும்.
அந்த போட்டியாளரை நாம் மிகவும் யோசித்து விளையாடச் செய்தாலே நாம் வெற்றியடைந்தது போல் தான்.
இன்றைய புதிர்: கீழ்க்கண்டவற்றில் நீங்கள் ஏதேனும் ஒன்றை கையெடுக்காமல் எழுதி வாக்கியத்தை மெய்ப்பிக்கவும்.
I X = 6
I X = 6