பல்ப் புதிருக்கான விடை:
முதல் ஸ்விட்சை போட்டு சிறிது நேரம் கழித்து அணைத்து விடவும். பிறகு இரண்டாவது ஸ்விட்சை போட்டு விட்டு மாடிக்குச் சென்று பார்க்கவும்.
இப்போது பல்ப் எரிந்தால், இரண்டாவது ஸ்விட்ச். பல்ப் எரியவில்லையானால், பல்பைத் தொட்டுப் பார்க்கவும், சூடாக இருந்தால், முதல் ஸ்விட்ச்.
பல்ப் எரியவும் இல்லை, சூடகவும் இல்லை எனில், மூன்றாவது ஸ்விட்ச்.
புரிகிறதா? நாம் சில முக்கிய விஷயங்களைக் கூட சில நேரங்களில் மறந்து விடுகிறோம்.
இந்த தற்காலிக மறதியினால் கூட நமக்கு, நம் வீட்டு தொலைபேசி எண், அலுவலக எண், திருமண நாள், ஆகியன மறந்து விடுகிறோம்.
இதை சரி செய்ய இயலும்.
நம் நினைவிலிருக்கும் இந்த தகவல்களை, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், சொல்லவோ, எழுதவோ, பேசவோ, செய்ய வேண்டும்.
உதாரணமாக: அலுவலகத்திற்கு பேச வேண்டும், என்பதற்கு பதிலாக, 2533561 க்கு போன் பேச வேண்டும், என சொல்லலாம். திருமண நாளுக்கு, பரிசு தர வேண்டும், என்று யோசிப்பதற்கு பதிலாக, செப்டம்பர், 5ம் தேதி பரிசு வாங்க வேண்டும் என்று யோசிக்கவேண்டும்.
ஒவ்வொரு முறையும் மூளையிலிருந்து தகவல்களை எடுக்கும் போது, தகவல் மீண்டும் எடுக்கும் வண்ணம் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. ஆகவே உடனே நினைவுக்கு வருகிறது.
தேர்வுக்குச் செல்லும் மாணவர்களை மீண்டும், மீண்டும் படிக்கவோ, எழுதவோ, செய்யச் சொல்வது இதன் காரணமாகத்தான்.
கீழ்க்கண்ட பள்ளிப் பேருந்து எந்த திசையில் செல்கிறது? வலது புறமா? அல்லது இடது புறமா?
No comments:
Post a Comment