இந்தப் புதிருக்கு இரண்டு விடைகள் உள்ளன. முதலில் 1x6=6 என எழுதலாம். இரண்டாவதாக சிக்ஸ் = 6 என்றும் எழுதலாம்.
இது தவிர உங்களுக்கு தோன்றும் மாறுபட்ட சிந்தனைகளை எனக்கு தெரிவிக்கவும்.
உங்கள் பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் பயம் ஆகியவற்றை தாளில் எழுதிப்பார்தீர்களா?
ஸ்வாட் பகுப்பாய்வு செய்தீர்களா?
ஒரு கணித சூத்திரம் உங்களுக்கு மனதில் நிற்கவில்லையானால், புத்தகத்தை தலைகீழாக வைத்து படியுங்கள்.
உடனே மனதில் பதியும். இதன் காரணம் என்ன? புத்தகத்தை தலைகீழாக வைத்துப் படிக்கும் போது, நாம் உண்மையில் ஆழ்ந்து படிக்கிறோம், ஆகவே தான் மனதில் பதிகிறது.
தலைகீழாக வைத்துப்படிக்கும் போது மேம்போக்காக படிக்க இயலாது. ஆகவே எதைப் படித்தாலும் ஆழ்ந்து படியுங்கள்.
திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, இவற்றை பயன்படுத்தாமல் மூன்று நாட்களை வரிசைப்படுத்த முடியுமா? தமிழில் கூறவும்.
மீண்டும் சந்திப்போம். -- சதாசிவம்
மீண்டும் சந்திப்போம். -- சதாசிவம்
No comments:
Post a Comment