சென்ற பகுதியில், "வண்ணங்கள் நம் வாழ்வின் எண்ணங்கள்." என்று உணர்ந்தோம்.
மாத்தி யோசி பகுதியில் இது வரை பகிர்ந்து கொண்டதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இன்னமும் நாம் எவ்வளவு கூர்ந்து படிக்கிறோம் என்று கவனியுங்கள்.
வேகமாகப் படித்து விட்டுச் செல்லாதீர்கள். நின்று, நிதானித்து படியுங்கள். அப்போது ஒரு முறை படித்தாலே அனைத்தும் விளங்கி விடும்.
'மாத்தி யோசி' யில் சற்று கவனித்துப் படித்தாலே உங்களுக்கு 'மாத்தி யோசிக்கும் திறன்" வந்து விடும்.
இதில் நான் கூறும் புதிர்களை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் நன்மை பெறட்டும்.
ஒரு வேளை நமக்குத்தெரியாத, புதிய விடைகள் கூட அவர்கள் கூறலாம் இல்லையா?
இன்று ஒரு புதிர்: மணியின் தந்தைக்கு நான்கு மகள்கள், ஒரு மகன். முதல் மகள் பெயர் சித்திரை, இரண்டாம் மகள் பெயர் வைகாசி, மூன்றாம் மகள் பெயர் ஆனி, நான்காம் மகள் பெயர் ஆடி எனில் மகன் பெயர் என்ன?
-மீண்டும் சந்திப்போம்- சதாசிவம்
No comments:
Post a Comment