பெருக்கல் கணக்கின் புதிய வழிமுறையை கற்றுக்கொண்டீர்கள் அல்லவா? இதை மற்றவர்களுக்கும் சொல்லித் தரவும்.
மாறுபட்டு சிந்திக்க சில வழிகள்:
1. எப்போதும் ஒரே ஒரு தீர்வுடன் உங்கள் சிந்தனையை நிறுத்தாதீர்கள். பல தீர்வுகள் கண்டறிய முயலுங்கள்.
2. நீங்கள் கண்டறியும் தீர்வுகள் சில நகைப்புக்குரியனவாகவும் இருக்கலாம், கவலைபடாதீர்கள்.
3. உங்கள் சிந்தனைகள் அனைத்தும் விதைகளே. அதை பயன்படுத்தாமல் இருக்க வேண்டாம்.
4. உங்களுடைய நோக்கத்தை மையமாக வைத்து பகல் கனவு காணுங்கள், அதில் சில தீர்வுகள் கிடைக்கும்.
5. புத்தம் புதிய கருத்துகள் எப்போது வேண்டுமானாலும் உதிக்கலாம், அதுவே மறந்தும் விடலாம். ஆகவே புதிய கருதுருக்களை எழுதி வையுங்கள்.
நீங்கள் சாலையோரம் பேருந்துக்காக காத்திருக்கிறீர்கள். பேருந்து வருகிறது ஆனால் நிற்காமல் சென்று விடுகிறது. அப்பேருந்து சில கி.மீ சென்று பெரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.
உங்களுக்கு தகவல் தெரிய வரும் போது நீங்கள் சொல்லுகிறீர்கள் ' நான் பேருந்தில் ஏறியிருந்தால் விபத்து நடந்திருக்காது' என்று.
ஏன் அவ்வாறு கூறினீர்கள்? இதற்கு பல விடைகள் உண்டு. உங்களால் எவ்வளவு யோசிக்க இயலும்?
மேற்கூறிய வழியில் சிந்தித்து வையுங்கள். மீண்டும் சந்திப்போம்.- சதாசிவம்.
ஏன் அவ்வாறு கூறினீர்கள்? இதற்கு பல விடைகள் உண்டு. உங்களால் எவ்வளவு யோசிக்க இயலும்?
மேற்கூறிய வழியில் சிந்தித்து வையுங்கள். மீண்டும் சந்திப்போம்.- சதாசிவம்.
மாத்தியோசி மிகவும் அற்புதம்!!!
ReplyDelete