Tuesday, April 26, 2011

கற்பனை செய்து கொண்டு கேள்விக்கு பதில் கூறுங்கள்.

சீட்டுக்கட்டு புதிரில் நீங்கள் முதல் முறையில் ஆச்சரியம் அடைந்து, மீண்டும் வேறு கார்டை நினைத்து பார்த்திருப்பீர்கள்.  

 பிறகு தான் உங்களுக்கு விஷயம் புரிந்திருக்கும்.  இன்னமும் எப்படி நினத்த கார்டு மாயமானது என சிந்திப்பவர்கள், மீண்டும் சென்ற பகுதியைப் படிக்கவும்.


லண்டனில், வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை உள்ளது.  அங்கு 'பிக் பென்'

 என்ற
 மணிக்கூண்டு உள்ளது.  1858ல் பயன்பாட்டிற்கு வந்த

 இந்த கடிகாரத்தின் சிறிய முள்ளின் நீளம் 9 அடி, பெரிய முள்ளின் நீளம் 14 அடி. கடிகாரத்தின் விட்டம் 25 அடி.  இன்று வரை துல்லியமாக ஓடிக்கொண்டிருக்கும்

 இக்கடிகாரத்தை வடிவமைத்தவர் எட்மன்ட் பெக்கட் டெனிசன்.  

இந்த மணிக்கூண்டை நீங்கள் கற்பனை செய்து கொண்டு கீழ் வரும் கேள்விக்கு பதில் கூறுங்கள்.

பிக் பென்னில் எத்தனை முட்கள் உள்ளன?

மீண்டும் சந்திப்போம்.- சதாசிவம்.
Print Page

No comments:

Post a Comment

 
Copy Rights @2010 - Erode Chess Academy