பரவாயில்லை. பாதிப் பேர் சரியாகச் சொல்லி விட்டீர்கள். கடைசியாக ஓடும் உங்கள் நண்பரை யாரும் முந்திச்செல்ல முடியாது.
உங்களிடம் 1000 டிரில்லியன் (1,00,00,00,00,00,00,000) இணைப்புகள் உள்ள, வயரிங் பக்காவாக உள்ள, ஒரு இயந்திரம் உள்ளது. (அந்த எலக்ட்ரிசியனை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா) இந்த இயந்திரம் நம் வசதிக்காக இரு பகுதிகளாக உள்ளது.
இடது பக்கம் உள்ள பகுதி கணக்கிடுதல், பகுத்தாய்வு செய்தல் போன்றவற்றையும், வலது பக்கம் உள்ள பகுதி கற்பனை, ஓவியம்,சங்கீதம் போன்றவற்றையும் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர்க்கு இடது பகுதியை மட்டும் அதிக வேலை செய்கிறது . சிலருக்கு மட்டும் வலது பகுதியும் இடது பகுதிக்கு சமமாக வேலை செய்கிறது. அவர்கள் முடிவெடுப்பதிலும், மாறுபட்டு சிந்திப்பதிலும் கெட்டிக்காரர்களாயிருக்கிறார்கள்.
அனைவருக்கும் ஒரே மாதிரி இடது, வலது பகுதிகள் ஏன் வேலை செய்ய வைக்க இயலாதா. இயலும் அதற்கு சற்று பயிற்சி தேவை. நான் சொல்ல வந்த இயந்திரம் என்னவென்று நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஆண்டவன் அனைவருக்கும் ஒரே மதிரி அளித்த 'மூளை 'தான் அது. இப்போது கூறுங்கள், மேற்கூறிய அத்தனை கோடி இணைப்புகளையும் சும்மா வைத்திருப்பதா? வலது பகுதிக்கு பயிற்சி வேண்டுமா?
செஸ் விளையாடுங்கள். ஆம். செஸ் விளையாடும் போது வலது மூளை சுறுசுறுப்படைகிறது. குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ள மாறுபட்டு சிந்திக்கும் திறன், செஸ் விளையாடுவதால்
, வளர்கிறது. இன்றைய புதிர்: உங்களுக்கு ஒரு கேக் தரப்பட்டிருக்கிறது. அதன் ஒரு முனை உடைந்துள்ளது. அதை நீங்கள் சரி சமமாக வெட்டி உங்கள் இரு குழந்தைகளுக்குத் தர வேண்டும். எப்படி? மீண்டும் சந்திப்போம். -- சதாசிவம்
No comments:
Post a Comment