கேக்கின் முனை உடைந்திருந்தாலும், பக்கவாட்டில் வெட்டினால், இரு பாகங்களும் சமமாக இருக்கும்.
துறுதுறு குழந்கதைகளை சமாளிக்கும் அன்னையருக்கு இது போன்ற யோசனைகள் தோன்றுவதுண்டு.
வலது பக்க மூளையை தூண்டும் பயிற்சிகளில் ஒன்று கற்பனைக் கதைகள் உருவாக்குவது.
தமிழ் அல்லது ஆங்கில அகராதியை எடுத்து, ஏதேனும் இரு சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரு சொற்களை இணைத்து ஒரு கதை சொல்ல வேண்டும். விளையாட்டாக ஆரம்பிக்கும் இப்பயிற்சி, கற்பனையைத் தூண்டி குழந்தைகளை ஈடுபடுத்தும். இதை நீங்கள் முயற்சித்துப்பாருங்கள்.
எந்த அளவிற்குஆர்வம் உள்ளதோ, அந்த அளவிற்கு பயன் தரும்.
படிப்பையும், மாத்தி யோசிக்கும் திறமையையும் ஒன்றாகவே செயல்படுத்த வேன்டும்.
தனித்தனியே வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் தொலைக்கட்சியில் விளம்பரங்களை விரும்பிப்பார்க்கும், காரணம் விளம்பரங்கள் யாவும் மாறுபட்டு சிந்தித்து எடுக்கப்பட்டவை.
ஆகவே விள்ம்பரங்கள் குழந்தைகளை மட்டுமில்லாது பெரியவர்களையும் ஈர்க்கின்றன. கீழ்காணும் சொற்களை வேகமாகப் படியுங்கள்.
சிவப்பு, ஊதா, மஞ்சள், கருப்பு,
வெள்ளை,
பச்சை, நீலம்.
பிறகு எழுத்துக்களின் வண்ணங்களை மட்டும் படியுங்கள். இதை திரும்ப திரும்ப பயிற்சி செய்யுங்கள்.
மீண்டும் சந்திப்போம். -- சதாசிவம்
No comments:
Post a Comment