கட்டங்கள் கருப்பா, வெள்ளையா எனத்தெரிந்து கொண்டீர்களா? பிஸப் போகும் கட்டங்கள் ஏறு வரிசையிலும், இறங்கு வரிசையிலும் எவ்வாறு உள்ளது என்று கவனியுங்கள். கீழ்கண்ட படத்தில் பார்த்து அறிந்து கொள்ளவும்
சிக்கலான சூழ் நிலையிலும் நிதானத்தை இழக்காமல் சிந்தித்தால் தான் தீர்வு காண இயலும். இது சொல்லும் போது எளிதாக இருக்கும்
ஆனால் செய்வது தான் கடினம் என்று நீங்கள் கூறுவது புரிகிறது.
உதாரணமாக செஸ் போட்டியின் போது ஒரு பவரை(குதிரையையோ, யானையையோ) விட்டு விட்டால், பதட்டப்பட்டு என்ன ஆகப்போகிறது?
இந்த சூழ் நிலையில் சிந்தித்து தீர்வு காண இயலும். சற்று நேரம் எழுந்து நின்று ஆட்டத்தை, பொசிஷனை, கவனியுங்கள். வேண்டுமானால் நீங்கள் எதிர்ப்பக்கமிருந்து பொசிஷனை கவனியுங்கள்.
புதிய சிந்தனைகள் உருவாகும், அதன் மூலம் தீர்வு கிடைக்கும். நீங்கள் தோற்றுப் போன அனைத்து கேம்களிலும், உங்கள் வெற்றி ஒளிந்து கொண்டிருந்தது,
ஆனால் நீங்கள் அதை கண்டுபிடிக்கவில்லை. போட்டி அரங்கிலிருந்து வெளியே வந்து, அனலைஸ் செய்தபோது 'அடடா இந்த மூவை செய்திருக்காலாமே' என்று நினைக்கிறோம். நல்ல மூவ்கள் நமக்கு உதிக்காததற்கு காரணம்,
நாம் வழக்கமான சிந்தனையிலிருந்து வெளியே வராததுதான். இதற்கு நாம் மாறுபட்டு சிந்திப்பது அவசியம் என்கிறேன்.
மீண்டும் கூறுகிறேன், மாறுபட்ட சிந்தனைகள் தொடர் பயிற்சியினால் சாத்தியம். ஆகவே விளையாட்டாக விளையாடும் போது கூட மாறுபட்டு சிந்திக்கவும், உங்கள் போர்டில், களத்தில் வெற்றி ஒளிந்து கொண்டுள்ளது கண்டுபிடித்து மகுடம் சூடவும்.
இன்றைய புதிர்: ஒரு விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, கொடிய பாலைவனத்தில் தரையிறங்கியது. விமானி, ஒரு மெக்கானிக், ஒரு கர்ப்பிணிப் பெண் ஆகியோர் உள்ளனர். அவர்களிடம் இரண்டு பயணிகளுக்கு மட்டுமே குடி நீர் உள்ளது. அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்?
மீண்டும் சந்திப்போம்- சதாசிவம்